கதிர்நிலம்
Friday, October 26, 2012
Wednesday, November 16, 2011
துரோகிகளே !
விரகு சுள்ளிகள் ஈரமாய் உள்ளது
அந்த வேர்வை வெளிவர வெப்பமுமம்
தாகத்தோடு நிற்கின்றது !
கணக்கும் அந்த வெப்ப பொழுதிலே
கருகும் எந்தன் எதிரியின் நிழலுமே
கூடி நின்றவர் ஒடமுற்படுவர்
ஓட்டமும் ஒற்றை காலாய் மாறிடுமே
மண்டியிட்டு கெஞ்சும் போதிலும்
அவர்களுக்கு மரணம் விஞ்சி டுமே
விரகு சுள்ளிகள் ஈரமாய் உள்ளது
அந்த வேர்வை வெளிவர வெப்பமுமம்
தாகத்தோடு நிற்கின்றது !
கணக்கும் அந்த வெப்ப பொழுதிலே
கருகும் எந்தன் எதிரியின் நிழலுமே
கூடி நின்றவர் ஒடமுற்படுவர்
ஓட்டமும் ஒற்றை காலாய் மாறிடுமே
மண்டியிட்டு கெஞ்சும் போதிலும்
அவர்களுக்கு மரணம் விஞ்சி டுமே
Thursday, February 3, 2011
மறு பதிப்பு
மே-17: ஓயாது நினைவுகள்!
மே 19, 2010 23 மறுமொழிகள்
இனி
ஒவ்வொரு ஆண்டும்
பல கவிஞர்கள் தவறாமல்
கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும்
பல கவிஞர்கள் தவறாமல்
கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும்.
அவற்றில்,
எது உண்மையான
உணர்ச்சியிலிருந்து எழும்பியது,
எது வார்த்தைகளை
மடித்துப் போட்டது என்பது,
சித்தி பெற்ற நிறைபோதையில்
விக்கிரமாதித்யன் கூட
கண்டறிய இயலாத புதிராயிருக்கும்.
எது உண்மையான
உணர்ச்சியிலிருந்து எழும்பியது,
எது வார்த்தைகளை
மடித்துப் போட்டது என்பது,
சித்தி பெற்ற நிறைபோதையில்
விக்கிரமாதித்யன் கூட
கண்டறிய இயலாத புதிராயிருக்கும்.
பதிவர்கள் காத்திருந்து
பதிவிடும் நாளாயிருக்கும்.
பதிவிடும் நாளாயிருக்கும்.
கொல்லப்பட்ட
இலட்சக்கணக்கான
மக்களைப் பற்றி…
இலட்சக்கணக்கான
மக்களைப் பற்றி…
ஏன் தாக்குகிறார்கள் என்பதை
புரிந்து கொள்ளாத குற்றத்தைச் செய்த
குழந்தைகளைப் பற்றி…
புரிந்து கொள்ளாத குற்றத்தைச் செய்த
குழந்தைகளைப் பற்றி…
ஷெல் விழும் வேளைகளில்
கர்ப்பமுறாத வயிறுகளே வெடிக்கையில்,
எனது சிசுவைக் காப்பாற்று என,
வெடிகுண்டு வந்த வானத்திலிருக்கும்
கடவுளிடம் கைகூப்பித் தொழுத
கர்ப்பிணிகளைப் பற்றி…
கர்ப்பமுறாத வயிறுகளே வெடிக்கையில்,
எனது சிசுவைக் காப்பாற்று என,
வெடிகுண்டு வந்த வானத்திலிருக்கும்
கடவுளிடம் கைகூப்பித் தொழுத
கர்ப்பிணிகளைப் பற்றி…
தமது வயதில் கால் பங்கு கூட இல்லாத
கண்மணிகள் செத்து விழுவதைக் கண்டவாறு
வானிலிருந்து விழும் ஆர்ட்டலரிகளுக்கு அஞ்சி ஓடிய
முதியவர்களைப் பற்றி…
கண்மணிகள் செத்து விழுவதைக் கண்டவாறு
வானிலிருந்து விழும் ஆர்ட்டலரிகளுக்கு அஞ்சி ஓடிய
முதியவர்களைப் பற்றி…
புத்தனின் அகிம்சையை
போர்க்களத்தில் கடைபிடித்து
அசையாது மரணத்திற்காய்
அன்றாடம் காத்திருந்த
உடல் ஊனமுற்றவர்கள்,
நோயாளிகளைப் பற்றி…
போர்க்களத்தில் கடைபிடித்து
அசையாது மரணத்திற்காய்
அன்றாடம் காத்திருந்த
உடல் ஊனமுற்றவர்கள்,
நோயாளிகளைப் பற்றி…
வாழ்நாள் இலட்சியமான ஈழம்
தமது கண்முன்னே
கழுத்தறுத்து கொலை செய்யப்படுவதைக்
காணச் சகியாது,
இறுதி நொடி வரை
சயனைட் குப்பிகளோடு போராடி மடிந்த
புலிகளின் சாதாரணப் போராளிகளைப் பற்றி…
தமது கண்முன்னே
கழுத்தறுத்து கொலை செய்யப்படுவதைக்
காணச் சகியாது,
இறுதி நொடி வரை
சயனைட் குப்பிகளோடு போராடி மடிந்த
புலிகளின் சாதாரணப் போராளிகளைப் பற்றி…
யார் பிணமானார்கள்,
யார் மிஞ்சினார்கள்,
யார் காணாமல் போனார்கள் என்று
இன்னமும் தெரியாத நிலையில்,
வாய் திறவாமல் மெளனித்து விட்ட
இலங்கையில் வாழும் மனிதகுல அகதிகளைப் பற்றி…
இந்தியாவிற்கு ஓடி வந்த இலங்கை அகதிகளைப் பற்றி…
யார் மிஞ்சினார்கள்,
யார் காணாமல் போனார்கள் என்று
இன்னமும் தெரியாத நிலையில்,
வாய் திறவாமல் மெளனித்து விட்ட
இலங்கையில் வாழும் மனிதகுல அகதிகளைப் பற்றி…
இந்தியாவிற்கு ஓடி வந்த இலங்கை அகதிகளைப் பற்றி…
இவர்கள் யாரைப் பற்றியும்
ஒற்றைச் சொல் கூட இல்லாமல்,
எனது தலைவன் சாகவில்லை
என சிலர் பெருமூச்சு விடலாம்.
பதிவெழுதலாம்.
மீள்பிரசுரம் செய்யலாம்.
ஒற்றைச் சொல் கூட இல்லாமல்,
எனது தலைவன் சாகவில்லை
என சிலர் பெருமூச்சு விடலாம்.
பதிவெழுதலாம்.
மீள்பிரசுரம் செய்யலாம்.
உண்மையில்,
ஒரு அரை நூற்றாண்டுக் கனவு
ஈவிரக்கமின்றி கொலைசெய்யப்பட்ட பின்,
தனது சக வீரர்களெல்லாம்,
வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் கூட
மிச்சமின்றி அழிக்கப்பட்ட பின்,
வாழ நேர்வது,
அதுவும் தலைமறைவாய்
உயிர் சுமக்க நேர்வது
ஒரு உண்மையான வீரனுக்கு
சாவை விட சித்திரவதையானதாகும்.
இவை வரலாற்றின் தீராத பக்கங்களில்
கரிபால்டி உணர்ந்து சொல்லிய வார்த்தைகள்.
ஒரு அரை நூற்றாண்டுக் கனவு
ஈவிரக்கமின்றி கொலைசெய்யப்பட்ட பின்,
தனது சக வீரர்களெல்லாம்,
வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் கூட
மிச்சமின்றி அழிக்கப்பட்ட பின்,
வாழ நேர்வது,
அதுவும் தலைமறைவாய்
உயிர் சுமக்க நேர்வது
ஒரு உண்மையான வீரனுக்கு
சாவை விட சித்திரவதையானதாகும்.
இவை வரலாற்றின் தீராத பக்கங்களில்
கரிபால்டி உணர்ந்து சொல்லிய வார்த்தைகள்.
கரிபால்டியின் வலியை
உணராமல் பேசுகிறவர்கள்
உண்மையில்,
அவர் உயிரோடிருந்தால்
புண்ணாகியிருக்கக் கூடிய இதயத்தில்
அனுதினமும் கூரான வேல் பாய்ச்சி,
அவரை உயிரோடு இருக்கச் சொல்லி கொல்கிறார்கள்.
உணராமல் பேசுகிறவர்கள்
உண்மையில்,
அவர் உயிரோடிருந்தால்
புண்ணாகியிருக்கக் கூடிய இதயத்தில்
அனுதினமும் கூரான வேல் பாய்ச்சி,
அவரை உயிரோடு இருக்கச் சொல்லி கொல்கிறார்கள்.
பலர்
கருத்தரங்குகள்,
அரங்கக் கூட்டங்கள் நடத்தலாம்.
கருத்தரங்குகள்,
அரங்கக் கூட்டங்கள் நடத்தலாம்.
நிகழ்த்தப்படும் உரைகளிலிருந்து
எது இலங்கை அரசு ஏற்பாடு செய்தது,
எது இந்திய அரசு ஏற்பாடு செய்தது,
எது ஓட்டுப் பொறுக்கி அரசியல் ஏற்பாடு செய்தது,
எது வருடாந்திரக் கணக்கிற்காக ஏற்பாடு செய்தது,
எது நேர்மையான சந்தர்ப்பவாதம்,
எது நேர்மையற்ற சந்தர்ப்பவாதம்
என்பதையெல்லாம் கண்டறிவது கடினமாயிருக்கும்.
எது இலங்கை அரசு ஏற்பாடு செய்தது,
எது இந்திய அரசு ஏற்பாடு செய்தது,
எது ஓட்டுப் பொறுக்கி அரசியல் ஏற்பாடு செய்தது,
எது வருடாந்திரக் கணக்கிற்காக ஏற்பாடு செய்தது,
எது நேர்மையான சந்தர்ப்பவாதம்,
எது நேர்மையற்ற சந்தர்ப்பவாதம்
என்பதையெல்லாம் கண்டறிவது கடினமாயிருக்கும்.
பெரியாரை தலித் விரோதி என நிராகரிக்கும்
தலித் எம்.எல்.ஏ வியாசர்கள்,
கோவையில் தெருவிலிறங்கி
இசுலாமியரை வேட்டையாடிய அர்ச்சுனனை,
கொலைக்கஞ்சாத பார்ப்பன பயங்கரவாதியை,
மக்கள் விரோதி என நிராகரிக்காமல்,
ஈழ விடுதலைப் போராளியாக அங்கீகரித்து,
ஒரே மேடையில் நின்று பேசும்
வரலாற்றுக் குற்றங்கள்
உலகப் போர்க் குற்ற நாளில் அரங்கேறும்.
தலித் எம்.எல்.ஏ வியாசர்கள்,
கோவையில் தெருவிலிறங்கி
இசுலாமியரை வேட்டையாடிய அர்ச்சுனனை,
கொலைக்கஞ்சாத பார்ப்பன பயங்கரவாதியை,
மக்கள் விரோதி என நிராகரிக்காமல்,
ஈழ விடுதலைப் போராளியாக அங்கீகரித்து,
ஒரே மேடையில் நின்று பேசும்
வரலாற்றுக் குற்றங்கள்
உலகப் போர்க் குற்ற நாளில் அரங்கேறும்.
உரைகளில்
மெய்சிலிர்த்து போனதால்தான்,
வானத்திலிருந்து
அம்பேத்கர் சிந்தும் கண்ணீரில்
இரத்தம் வழிகிறதென
எல்லோரும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
மெய்சிலிர்த்து போனதால்தான்,
வானத்திலிருந்து
அம்பேத்கர் சிந்தும் கண்ணீரில்
இரத்தம் வழிகிறதென
எல்லோரும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
சத்குருக்களும்,
உலக நாயகர்களும்,
நெற்றிக்கண்ணை
மூடிக் கொள்ளும் நக்கீரர்களும்,
சீட்டுக்கவிஞர்களும்
என எல்லா டிக்கெட்டுகளும்
உணர்ச்சி பொங்க மேடையேறி
அரசனுக்கு சோப்புப் போட்டவாறு,
இசைக்கும் சோக கீதத்திலிருந்து
எழும்பும் பிடில் இரைச்சலில்,
நமது செவிப்பறைகள்
இயங்க மறுத்து ஊனமாகும்.
முத்துக்குமாரின் புத்திசாலித்தனம்
மெல்ல உறைக்கத் துவங்கும்.
உலக நாயகர்களும்,
நெற்றிக்கண்ணை
மூடிக் கொள்ளும் நக்கீரர்களும்,
சீட்டுக்கவிஞர்களும்
என எல்லா டிக்கெட்டுகளும்
உணர்ச்சி பொங்க மேடையேறி
அரசனுக்கு சோப்புப் போட்டவாறு,
இசைக்கும் சோக கீதத்திலிருந்து
எழும்பும் பிடில் இரைச்சலில்,
நமது செவிப்பறைகள்
இயங்க மறுத்து ஊனமாகும்.
முத்துக்குமாரின் புத்திசாலித்தனம்
மெல்ல உறைக்கத் துவங்கும்.
“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்குமோ, அதுவும் நன்றாகவே நடக்கும்”
என ஒரு பாதிரியார் கீதாபதேசம் செய்யும்
பல்சமய தெய்வீகக் காட்சியில்,
ஈழத்தில் மிச்சமிருக்கும்
புல்பூண்டுகளும் கருகி மடிந்திருக்கும்.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்குமோ, அதுவும் நன்றாகவே நடக்கும்”
என ஒரு பாதிரியார் கீதாபதேசம் செய்யும்
பல்சமய தெய்வீகக் காட்சியில்,
ஈழத்தில் மிச்சமிருக்கும்
புல்பூண்டுகளும் கருகி மடிந்திருக்கும்.
“கரிபால்டியின் மீது சிறு துரும்பு விழுந்தாலும்,
தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்”
என அன்று சூளுரைத்தவர்கள்,
ஒவ்வொரு ஆண்டும்
ஸ்பார்ட்டகஸ் வரலாறு தொடங்கி
சாக்ரடீஸ் வரலாறு வரை சொல்லி,
புதிய புதிய வார்த்தைகளில்
சுடச்சுட சூளுரைத்துக் கொண்டிருப்பார்கள்.
காவல்துறையினர் தேநீர் அருந்தியவாறு
உரைகள் கேட்டு புத்துணர்ச்சியடைவார்கள்.
தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்”
என அன்று சூளுரைத்தவர்கள்,
ஒவ்வொரு ஆண்டும்
ஸ்பார்ட்டகஸ் வரலாறு தொடங்கி
சாக்ரடீஸ் வரலாறு வரை சொல்லி,
புதிய புதிய வார்த்தைகளில்
சுடச்சுட சூளுரைத்துக் கொண்டிருப்பார்கள்.
காவல்துறையினர் தேநீர் அருந்தியவாறு
உரைகள் கேட்டு புத்துணர்ச்சியடைவார்கள்.
ஒரு அடிமையாக மற்றொரு அடிமைக்கு
உதவி செய்ய முடியா விட்டாலும்
மானத்தோடு வாழ்ந்த,
பிழைக்கத் தெரியாத அசடான
அந்த ஈரோட்டுக் கிழவன்,
புகைப்படப் பிரேதமாய் பின்னிருக்க,
அவரது பெயர் மட்டும் மிஞ்சிய திடலின்
மேடையில் பேசும் மானங்கெட்ட அடிமைகள்
மனுநீதிச் சோழனுக்கு மனுப்போடுவார்கள்.
ஆவேசமாய் ஆற்றும் சொற்பொழிவு
அடுத்த தெருவுக்குக் கூட கேட்கவில்லை
என்பதை உத்திரவாதம் செய்த பின்னால்,
கவனமாய் கடமையாற்றிய திருப்தியோடு
கூட்டம் மெல்லக் கலையும்.
உதவி செய்ய முடியா விட்டாலும்
மானத்தோடு வாழ்ந்த,
பிழைக்கத் தெரியாத அசடான
அந்த ஈரோட்டுக் கிழவன்,
புகைப்படப் பிரேதமாய் பின்னிருக்க,
அவரது பெயர் மட்டும் மிஞ்சிய திடலின்
மேடையில் பேசும் மானங்கெட்ட அடிமைகள்
மனுநீதிச் சோழனுக்கு மனுப்போடுவார்கள்.
ஆவேசமாய் ஆற்றும் சொற்பொழிவு
அடுத்த தெருவுக்குக் கூட கேட்கவில்லை
என்பதை உத்திரவாதம் செய்த பின்னால்,
கவனமாய் கடமையாற்றிய திருப்தியோடு
கூட்டம் மெல்லக் கலையும்.
உணர்வுபூர்வமான
சிலர் உண்ணாவிரதம் நடத்தலாம்.
தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.
கருத்துரிமையில் அக்கறை கொண்ட
காவல்துறை வாஞ்சையோடு
கைகாட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில்,
தொண்டை கிழிய முழக்கமிடலாம்.
விரையும் வாகனங்களின்
சக்கரங்களில் இழுபட்டு
முழக்கங்கள் விபத்துக்குள்ளாகலாம்.
சிலர் உண்ணாவிரதம் நடத்தலாம்.
தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.
கருத்துரிமையில் அக்கறை கொண்ட
காவல்துறை வாஞ்சையோடு
கைகாட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில்,
தொண்டை கிழிய முழக்கமிடலாம்.
விரையும் வாகனங்களின்
சக்கரங்களில் இழுபட்டு
முழக்கங்கள் விபத்துக்குள்ளாகலாம்.
மக்களிடம் பேசிய முத்துக்குமார்…
மக்களை பேச வைத்த முத்துக்குமார்…
மக்கள் பேச வேண்டுமென
செத்துப் போன முத்துக்குமார்…
அந்த முத்துக்குமார் மட்டும்
கட்சி வேறுபாடின்றி,
பெரும்பாலான மேடைகளில்
எதுவும் பேசாமல்
புகைப்படமாகக் காட்சியளிப்பார்.
மக்களை பேச வைத்த முத்துக்குமார்…
மக்கள் பேச வேண்டுமென
செத்துப் போன முத்துக்குமார்…
அந்த முத்துக்குமார் மட்டும்
கட்சி வேறுபாடின்றி,
பெரும்பாலான மேடைகளில்
எதுவும் பேசாமல்
புகைப்படமாகக் காட்சியளிப்பார்.
மவுண்ட்ரோடிலிருந்தும்,
முட்டைக் கறை
பட்ட வேட்டியிலிருந்தும்,
வருடாந்திர வாழ்த்துச் செய்தி
இலங்கை அரசருக்கு
ஒவ்வொரு ஆண்டும்
கூரியர் செய்யப்பட்டிருக்கும்.
முட்டைக் கறை
பட்ட வேட்டியிலிருந்தும்,
வருடாந்திர வாழ்த்துச் செய்தி
இலங்கை அரசருக்கு
ஒவ்வொரு ஆண்டும்
கூரியர் செய்யப்பட்டிருக்கும்.
ஏதோ ஒரு பாலிவுட் நட்சத்திரம்
அல்லது ஒரு விளையாட்டு வீராங்கனையின்
அத்தியாவசியத் திருமணச் செய்தியால்
வழக்கமான இரங்கல் செய்திகளுக்கு
இடம் ஒதுக்க இயலவில்லை என
இனிவரும் காலங்களில்
பத்திரிக்கைகள் கைவிரிக்கலாம்.
அல்லது ஒரு விளையாட்டு வீராங்கனையின்
அத்தியாவசியத் திருமணச் செய்தியால்
வழக்கமான இரங்கல் செய்திகளுக்கு
இடம் ஒதுக்க இயலவில்லை என
இனிவரும் காலங்களில்
பத்திரிக்கைகள் கைவிரிக்கலாம்.
யார் மறந்தாலும்
அம்பானிக்கும்,
டாட்டாவுக்கும்,
மிட்டலுக்கும்
மறக்க முடியாத நாளாக
என்றும் நினைவில் நிற்கும்.
இலங்கையில்
புதிய காண்ட்ராக்டுகள்
கையெழுத்திடும்
வருடாந்திர முகூர்த்த நாளை
அவர்கள் மறக்க வாய்ப்பில்லை.
அம்பானிக்கும்,
டாட்டாவுக்கும்,
மிட்டலுக்கும்
மறக்க முடியாத நாளாக
என்றும் நினைவில் நிற்கும்.
இலங்கையில்
புதிய காண்ட்ராக்டுகள்
கையெழுத்திடும்
வருடாந்திர முகூர்த்த நாளை
அவர்கள் மறக்க வாய்ப்பில்லை.
…
சில ஆண்டுகள் கழித்து
தில்லி அரசியின் தலைமையில்
மெழுகுவர்த்தி அஞ்சலி நடக்கும்.
தில்லி அரசியின் தலைமையில்
மெழுகுவர்த்தி அஞ்சலி நடக்கும்.
கோபாலபுரத்திலிருந்து வந்த,
மெழுகை விடவும் அதிகமாக உருகும்
கவிதை போன்றதொரு வஸ்து
அங்கே வாசித்துக் காட்டப்படும்.
மெழுகை விடவும் அதிகமாக உருகும்
கவிதை போன்றதொரு வஸ்து
அங்கே வாசித்துக் காட்டப்படும்.
கவிதை எழுத முடியாத
குஜராத் அரசரும், அறிக்கை அரசியும்
மலர்ச்செண்டுகளை அனுப்பி நயமாக
தமது வருத்தங்களை தெரிவிப்பார்கள்.
குஜராத் அரசரும், அறிக்கை அரசியும்
மலர்ச்செண்டுகளை அனுப்பி நயமாக
தமது வருத்தங்களை தெரிவிப்பார்கள்.
“ஈழப் பிரச்சினைக்குக் கூட
இரங்கல் தெரிவிக்காதவர்கள் நாய்கள்!”
என மக்கள் பிரதிநிதிகள்
வீற்றிருக்கும் அவையில்
பாரதப் பண்பாட்டைப் பேணிக் காக்கும்
கட்சியின் தலைவர் ஆவேசமாகக் குலைப்பார்.
பின்னர்,
தமது கண்ணியமான கருத்திற்கு
கனமான இரங்கல் தெரிவிப்பார்.
இரங்கல் தெரிவிக்காதவர்கள் நாய்கள்!”
என மக்கள் பிரதிநிதிகள்
வீற்றிருக்கும் அவையில்
பாரதப் பண்பாட்டைப் பேணிக் காக்கும்
கட்சியின் தலைவர் ஆவேசமாகக் குலைப்பார்.
பின்னர்,
தமது கண்ணியமான கருத்திற்கு
கனமான இரங்கல் தெரிவிப்பார்.
சிறப்பு விருந்தினராகக்
கலந்து கொள்ளும்
சீன அரசரும்,
இலங்கை அரசரும்
ஈழப் படுகொலையை எண்ணி
தமது உரையில்
உணர்ச்சிவசப்பட்டு அழ,
தேசமே உச்சு கொட்டும்.
கலந்து கொள்ளும்
சீன அரசரும்,
இலங்கை அரசரும்
ஈழப் படுகொலையை எண்ணி
தமது உரையில்
உணர்ச்சிவசப்பட்டு அழ,
தேசமே உச்சு கொட்டும்.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
ரிமோட்டை எடுத்து
சேனல் மாற்றும்.
ரிமோட்டை எடுத்து
சேனல் மாற்றும்.
இந்த ஆண்டு போல்
வரும் ஆண்டுகளிலும்
இதே நாளில்
கடும் மழை பொழிந்து,
இலங்கை அரசர்
வெற்றி விழாவை
ரத்து செய்வதாக அறிவித்து விட்டால்,
நாத்திகர்கள்
தமது கடவுள் மறுப்பை
மறுபரிசீலனை செய்யலாம்.
வரும் ஆண்டுகளிலும்
இதே நாளில்
கடும் மழை பொழிந்து,
இலங்கை அரசர்
வெற்றி விழாவை
ரத்து செய்வதாக அறிவித்து விட்டால்,
நாத்திகர்கள்
தமது கடவுள் மறுப்பை
மறுபரிசீலனை செய்யலாம்.
…
சில ஆண்டுகள் கழித்து
ஒரு தமிழ்நாட்டுச் சிறுமி
தனது அப்பாவிடம் கேட்பாள்:
“அப்பா, இந்த ஈழம்னா என்னப்பா?
மே-17 அன்னிக்கு என்னப்பா நடந்துச்சு?”
“அதுவா, அது ஒரு பழைய கதம்மா, அத விடு”
என முகத்தைத் திருப்பிக் கொள்வார் அப்பா.
ஒரு தமிழ்நாட்டுச் சிறுமி
தனது அப்பாவிடம் கேட்பாள்:
“அப்பா, இந்த ஈழம்னா என்னப்பா?
மே-17 அன்னிக்கு என்னப்பா நடந்துச்சு?”
“அதுவா, அது ஒரு பழைய கதம்மா, அத விடு”
என முகத்தைத் திருப்பிக் கொள்வார் அப்பா.
சில அப்பாக்களை
அந்தக் கேள்வி துரத்தும்.
இரவில்
மகனுக்கோ,
மகளுக்கோ,
மனைவிக்கோ தெரியாமல்
அந்தக் கேள்வியை எண்ணி
அவர் அழலாம்.
அந்தக் கேள்வி துரத்தும்.
இரவில்
மகனுக்கோ,
மகளுக்கோ,
மனைவிக்கோ தெரியாமல்
அந்தக் கேள்வியை எண்ணி
அவர் அழலாம்.
சில அப்பாக்கள்
தான் சொன்ன பதில்தான் உண்மை
என தனக்குத் தானே
திரும்ப திரும்ப சொல்லிக் கொள்ளலாம்.
புரண்டு படுத்து தூங்கலாம்.
தான் சொன்ன பதில்தான் உண்மை
என தனக்குத் தானே
திரும்ப திரும்ப சொல்லிக் கொள்ளலாம்.
புரண்டு படுத்து தூங்கலாம்.
வருடத்தில் வரும்
இந்த ஒரு நாள்
கடந்த பின்னால்,
வேறு நாட்களில்,
வேறு நாட்களின்
வரலாற்று முக்கியத்துவம் பற்றி,
கவிதை எழுதி,
கவிதைகளாக எழுதி எழுதி,
பதிவு எழுதி,
பதிவுகளாக எழுதி எழுதி,
கூட்டம் போட்டு…
கூட்டங்களாக போட்டு போட்டு…
அடுத்த ஆண்டு
மே-17 வரை காலத்தை ஓட்டலாம்.
இந்த ஒரு நாள்
கடந்த பின்னால்,
வேறு நாட்களில்,
வேறு நாட்களின்
வரலாற்று முக்கியத்துவம் பற்றி,
கவிதை எழுதி,
கவிதைகளாக எழுதி எழுதி,
பதிவு எழுதி,
பதிவுகளாக எழுதி எழுதி,
கூட்டம் போட்டு…
கூட்டங்களாக போட்டு போட்டு…
அடுத்த ஆண்டு
மே-17 வரை காலத்தை ஓட்டலாம்.
சிலர்
கண்ணீர் மல்கும் கவிதை எழுதாமல்,
கசிந்துருகும் பதிவு எழுதாமல்,
சாமி வந்தது போல் நடித்து
வீராவேச உரைகள் நிகழ்த்தாமல்,
கண்ணீர் மல்கும் கவிதை எழுதாமல்,
கசிந்துருகும் பதிவு எழுதாமல்,
சாமி வந்தது போல் நடித்து
வீராவேச உரைகள் நிகழ்த்தாமல்,
என அழுத்தம் திருத்தமாக முன்வைக்கலாம்.
அவர்களைப் படிக்கும் அன்பர்களுக்கு
இவர்களை ஏன்
நமது மாபெரும் தமிழினத் தலைவர்கள்
‘கடிநாய்க் கம்யூனிஸ்டுகள்’,
‘பார்ப்பனத் தலைமை’,
‘வறட்டுவாதிகள்’
எனத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்குகிறார்கள்
என இயல்பாக ஒரு கேள்வி எழும்பும்.
இவர்களை ஏன்
நமது மாபெரும் தமிழினத் தலைவர்கள்
‘கடிநாய்க் கம்யூனிஸ்டுகள்’,
‘பார்ப்பனத் தலைமை’,
‘வறட்டுவாதிகள்’
எனத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்குகிறார்கள்
என இயல்பாக ஒரு கேள்வி எழும்பும்.
கேள்வியைத் தோழர்களிடம் கேட்பவர்கள்
கார்ல் மார்க்ஸ் பயணித்த சாலையில்
காலடி எடுத்து வைப்பார்கள்.
கார்ல் மார்க்ஸ் பயணித்த சாலையில்
காலடி எடுத்து வைப்பார்கள்.
தமது அருமைத் தலைவர்களிடம் கேட்பவர்கள்
நேர்மையான சந்தர்ப்பவாதத்திலிருந்து
நேர்மையற்ற சந்தர்ப்பவாதத்திற்கான
பரிணாம வளர்ச்சியின்
அடுத்த கட்டத்தை
சிறிதும் சிரமமின்றி அடைவார்கள்.
நிற்கும் இடத்திலிருந்து
கோபாலபுரமோ, போயஸ் கார்டனோ
எது அருகிலிருக்கிறதோ
அதனை நோக்கி நடக்கத் துவங்குவார்கள்.
நேர்மையான சந்தர்ப்பவாதத்திலிருந்து
நேர்மையற்ற சந்தர்ப்பவாதத்திற்கான
பரிணாம வளர்ச்சியின்
அடுத்த கட்டத்தை
சிறிதும் சிரமமின்றி அடைவார்கள்.
நிற்கும் இடத்திலிருந்து
கோபாலபுரமோ, போயஸ் கார்டனோ
எது அருகிலிருக்கிறதோ
அதனை நோக்கி நடக்கத் துவங்குவார்கள்.
பின்னர் ஒரு நாள்,
சிலரான
கடிநாய்க் கம்யூனிஸ்டுகள்
பலராகி விடும் போது,
அந்தச் சிலரது குரலில்
மிகப் பலர்
பல்வேறு திசைகளில்
நின்று உரத்து முழங்கும் பொழுது,
காலத்தின்
இரக்கமற்ற விதியைக் கிழித்து
வானுயர்ந்து எழும்பும்
ஓயாத நினைவுகள்
ஊழித் தாண்டவமாடும்.
சிலரான
கடிநாய்க் கம்யூனிஸ்டுகள்
பலராகி விடும் போது,
அந்தச் சிலரது குரலில்
மிகப் பலர்
பல்வேறு திசைகளில்
நின்று உரத்து முழங்கும் பொழுது,
காலத்தின்
இரக்கமற்ற விதியைக் கிழித்து
வானுயர்ந்து எழும்பும்
ஓயாத நினைவுகள்
ஊழித் தாண்டவமாடும்.
அன்று
இலங்கை அரசர்களும்,
இந்திய அரசர்களும்,
உலக முதலாளிகளும்
இரண்டாம் உலகப் போரின்
சைபீரியப் பனியை
தமது ஊனக் கண்ணில் தரிசிப்பார்கள்.
எழும்பும் பனிப்படலத்தின் நடுவே,
தற்கொலையின்
இறுதி நொடியில் நிற்கும் ஹிட்லர்
கண்ணியமான ஜெர்மானியப் புன்னகையுடன்
அரசர்களை வரவேற்று
காத்து நிற்கும் காட்சி
தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.
இலங்கை அரசர்களும்,
இந்திய அரசர்களும்,
உலக முதலாளிகளும்
இரண்டாம் உலகப் போரின்
சைபீரியப் பனியை
தமது ஊனக் கண்ணில் தரிசிப்பார்கள்.
எழும்பும் பனிப்படலத்தின் நடுவே,
தற்கொலையின்
இறுதி நொடியில் நிற்கும் ஹிட்லர்
கண்ணியமான ஜெர்மானியப் புன்னகையுடன்
அரசர்களை வரவேற்று
காத்து நிற்கும் காட்சி
தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.
இறுதியில்
நியாயத் தீர்ப்பு நாள்
வந்தே விட்டது என
ஆத்திகர்கள் கூட
குதூகலிப்பார்கள்.
நீதிபதி மேடையில்
இருப்பவர்
பழைய சோவியத் யூனியனிலிருந்த
ஜார்ஜியாவில் பிறந்தவர்
என்பதை அறியும் பொழுது மட்டும்
துவக்கத்தில்
சற்றே துணுக்குற்றாலும்,
அவரது தீர்ப்பை கேட்ட பின்
முதன்முறையாக
அல்லாவின் உருவத்தை
நீதிபதியிடம் காண்பார்கள்.
நியாயத் தீர்ப்பு நாள்
வந்தே விட்டது என
ஆத்திகர்கள் கூட
குதூகலிப்பார்கள்.
நீதிபதி மேடையில்
இருப்பவர்
பழைய சோவியத் யூனியனிலிருந்த
ஜார்ஜியாவில் பிறந்தவர்
என்பதை அறியும் பொழுது மட்டும்
துவக்கத்தில்
சற்றே துணுக்குற்றாலும்,
அவரது தீர்ப்பை கேட்ட பின்
முதன்முறையாக
அல்லாவின் உருவத்தை
நீதிபதியிடம் காண்பார்கள்.
முள்ளிவாய்க்காலில்
மீண்டும் புல் முளைக்கும்.
ஒரு வரலாற்றுக் கடமை
முடிந்த அமைதியில்,
இந்து மகா சமுத்திரம்
வானத்தை வெறிக்கும்
மீண்டும் புல் முளைக்கும்.
ஒரு வரலாற்றுக் கடமை
முடிந்த அமைதியில்,
இந்து மகா சமுத்திரம்
வானத்தை வெறிக்கும்
-வன்மம்
Wednesday, December 29, 2010
அம்பேத்கரை கண்டேன்
சென்னை மினி உதயம் திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படம் 11 மணி காட்சிக்காக நுழைவு சீட்டு வாங்கி கொண்டு 11:02 - க்கு உள்ளே நுழைந்தால் பேரதிர்ச்சி. என்னை தவிர வேறு யாருமே இல்லை. வெளியே வந்து நுழைவு காவலரிடம் கேட்ட போது "எல்லாரும் 11:30 மணி ஷோ-ன்னு நினச்சிட்டு வருவாங்க சார். எப்படியும் முன்னூறு பேர் வருவாங்க" என்றார். லேசாக பெருமூச்சு விட்டு விட்டு, உள்ளே நுழைந்து எனது இருக்கையில் அமர்ந்தேன். பத்து நிமிடத்துக்குள் சுமார் இருநூறு பேர் வந்து அமர, மனம் ஆறுதல் அடைந்தது.
இந்திய சுதந்திரத்தை முன்வைத்து லஜபதி ராயோடு அம்பேத்கர் கொண்டமுரண் அரசியலோடு கதை துவங்குகிறது. காட்சிகள் விரிய, விரிய அம்பேத்கர் என்ற பிரமாண்டம் எனது உடல் முழுவதும் வியாபிக்க துவங்கினார். வறுமையினாலும், தீராத வியாதியினாலும் தனது மனைவி,நான்கு குழந்தைகள் என எல்லாவற்றையும் பறி கொடுத்தும், வாழ்க்கையின் கடைசி காலகட்டம் வரை புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய இந்த மனிதனின் வாழ்க்கை கதையை திரையில் கண்ட போது, ஒரு மகானின் வாழ்க்கையை கண்டதாவே உணர்ந்தேன். 1956-ம் வருடம் அம்பேத்கர் இறந்தார் என்ற வரிகளோடு திரைப்படம் முடியும் போது மனம் கொஞ்சம் உணர்ச்சிவசப்படவே செய்தது.
திரையில் அம்பேத்கராக வாழ்ந்து காட்டிய மம்மூட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்தியாவின் மிக முக்கியமான தலைவர் வேடத்தில் ஒருவர் நடித்து, அனைத்து தரப்பு மக்களையும் கவர்வது லேசான காரியம் அல்ல, மம்மூக்கா அருமையாய் வாழ்ந்து காட்டி இருக்கிறார். அம்பேத்கர் பேரை கேட்டாலே ஓட்டம் பிடிக்கும் நமது நடிகர்கள் மத்தியில், ஒரு சவாலான கதாப்பத்திரத்தை ஏற்று, அதை கனக் கச்சிதமாய் செய்து முடித்திருக்கும் மம்மூக்காவின் மேல் மரியாதை இன்னும் கூடுகிறது.
திரையில் என்னை கவர்ந்த இன்னொரு மனிதர் காந்தியாக நடித்தவர். அதுவும் அவருடைய உடல்மொழி இருக்கிறதே அப்பப்பா.... அட்டகாசம்... காந்தி பேசும் பல காட்சிகளிலும், 'அம்பேத்கர் ஒழிக' என முழக்கம் கேட்கும் பல காட்சிகளிலும் திரையரங்கு முழுவதும் சன்னமான சிரிப்பொலி எழும்புகிறது.
படம் பார்த்து வெளியே வந்த போது ஏதாவது நண்பர்களை சந்தித்து விட மாட்டேனா, அவர்களிடம் ஒரு இருபது நிமிடம் அம்பேத்கர் பற்றியும், இந்த திரைப்படம் பற்றியும் பேச வேண்டும் போல் இருந்தது.
'சினிமா' பற்றி ஒவ்வருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். என்னை பொறுத்தவரையில் 'சினிமா' பொழுதுபோக்குக்கான ஊடகம் மட்டும் அல்ல.அது ஒரு நவீன கலையின் வடிவம். அந்த நவீன கலை ஊடகத்தின் வழியாக இது போன்ற நல்ல திரைப்படங்கள் வருவதே சமூகத்தை செம்மைபடுத்த உதவும்.
'அம்பேத்கர்' திரைப்படம் இன்னும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வரலாற்று நாயகனுடைய குரல் இன்னும் பல மக்களுக்கு போய் சேர்ந்திருக்குமே என்ற ஆதங்கம் எழாமல் இல்லை. அரிவாளுடனும், பரட்டை தலையுடனும் திரியும் கதாநாயகர்களையும், அதன் இயக்குனர்களையும் கட்டி பிடித்து பாராட்டி மகிழும் நமது சூப்பர் ஆக்டர்களுக்கோ, ஸ்டார்களுக்கோ அது பற்றிய அக்கறையே இல்லை. ஒருவேளை அப்படி செய்தால் தானும் தீண்டத்தகாதவன் ஆகி விடுவோம் என்ற பயம் காரணமாய் இருக்கும்!.
அம்பேத்கரை தலித்துகளின் குறியீடாக இன்று காண்பது துரதிஷ்டவசமானது, அது ஒரு சமூக மன நோயும் கூட... உண்மையில் அம்பேத்கர் நவீன இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கான குறியீடு.
வரலாற்றை நமக்கு சொல்லி தர மறந்த முந்தைய தலைமுறையும், வரலாற்றை கற்று கொள்ள போகும் நாளைய தலைமுறையையும் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குக்கு கூட்டி செல்லுங்கள். உண்மையான ஒரு சமூக போராளியின் வரலாறு அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
- ஸ்டாலின் பெலிக்ஸ் ( stalinfelix2000@gmail.com)
மேலே சொன்ன உணர்வு என்னிலும் படர் த தால்
Wednesday, December 22, 2010
தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறவன்....
தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறவன் - நாத்திகன்
தெரியாததை கடவுள் என்று கூறுபவன் - பக்தன்
கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை
பல்லடத்தில் நடந்த நாத்திகர் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:
இன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சி நாத்திகர் விழா என்ற பெயரால் ஒரு மாநாட்டை கூட்டி நாத்திக கருத்துகளை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அல்லது ஏற்கனவே இருக்கிற கருத்துகளை மேலும் தூண்டி விடுவதற்கும் அதை துளிர்த்து விடுவதற்குமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கிறோம் என்றாலும் இதெல்லாம் ஏற்கனவே மக்களுக்கு தெளிவாக தெரிந்த செய்திகள் தான். மாணவப் பருவத்தில் பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு அறிவியல் என்று ஊட்டப்படுகிறது. அறிவியல் பாடம் சொல்லி தந்த செய்திகள் அதிலே நிபுலா தியரி என்று சொல்லுகிறார்கள். பிக்பேங்க் தியரி என்று சொல்லுகிறார்கள். உலகம் எப்படி உண்டானது என்பதற்கு உலகம் கடவுளால் படைக்கப்பட்டது பொய் என்று அறிவியல் பாடம் சொல்லிவிட்டது மாணவப் பருவத்தில்.
டார்வின் தியரியை படிக்கிறார்கள் எப்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றது என்று. ஓர் அணு அமீபாவாக இருந்து மனிதனாக உரு மலர்ச்சிப் பெற்ற முழு வரலாற்றை டார்வின் தத்துவம் சொல்லி வருகிறது. ஆக மனிதன் படைக்கப்படவில்லை. மனிதன் உரு மலர்ந்தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அறிவியல் பாடம் சொல்லி விடுகிறது. எல்லாம் கடவுள் படைக்கவில்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அறிவியல்பாடம் சொல்கிறது. ஆனால் அறிவியல் என்பது அறிவியல் அறிவாக உள்ளது. அறிவியல் மனப்பான்மையாக மாற வேண்டும் என்பதே நம் நோக்கம்.
அறிவியல் அறிவு - ளுஉநைவேகைiஉ முnடிறடநனபந மட்டும் போதாது அறிவியல் மனப்பான்மை - ளுஉநைவேகைiஉ ஆநவேயடவைல வேண்டும். அப்படி அறிவியல் மனப்பான்மை இருந்தால் தான் எதையும் அறிவியல் பார்வையில் அணுக முடியும் - ளுஉநைவேகைiஉ யயீயீசடியஉh. அறிவியல் அணுகுமுறை இருந்தால் தானாகவே அறிவியல் கண்டுபிடிப்புகள் - ளுஉநைவேகைiஉ ஐnஎநவேiடிளே உருவாகும்.
அறிவியல் மனப்பான்மை இல்லாததால்தான் சரஸ்வதிக்கு வருடம் தவறாமல் பூஜை நடத்தியும் காகிதத்தை மிதித்தாலும் கண்ணில் ஒற்றிக் கும்பிடும் நமது நாடு தாழ்ந்து கிடக்க காகிதத்தில் மலம் துடைக்கும் ஐரோப்பியர்கள் மேலை நாட்டார்கள் வளர்ந்து நிற்கிறார்கள்.
அறிவியலை வயிற்றுக்காக படிப்பதற்கு மாறாக அறி வியலை மூளைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதை செயல்படுத்த வேண்டும் என்று கேட்பதும், அப்படி செயல்படுத்த வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் வைத்து அதற்கு துணையான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினார்கள். அருமைத் தோழர்கள் அலகு குத்தி தொங்கிய வண்ணம் காட்டினார்கள். இராட்டின காவடி என்று அலகு குத்தி தோழர் சட்ட கல்லூரி மாணவர் பன்னீர்செல்வம், கோவை மாநகர செயலாளர்கோபால், பல்லடத்தைச் சேர்ந்த குமார் கூட அலகு குத்தி வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். உள்ளூர் தோழர்களைப் பார்த்தீர்கள்.
பல பேர் வந்தார்கள். காரணம் இதன் மூலம் செயல் விளக்கமாக செய்ய வேண்டும் என்பதும் கூடுதல் முயற்சி. இப்படிப்பட்ட செயல்களில் கடவுள் மறுப்பைப் பற்றி ஏன் கடவுள் இல்லை, எப்படி இல்லை என்று விளக்குகிறார்கள். முழக்கமிட்டபோது கூட சிலருக்கு வருத்தமாக இருந் திருக்கும். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்கிறார்கள். பரப்பியவனை அயோக்கியன் என்கிறார்கள். வணங்கு கிறவனை காட்டுமிராண்டி என்று சொல்கிறார்கள். வீதியில் போகிறவனை பார்த்து திட்டுவதுபோல அல்ல.
இதனால் வருத்தமுற்ற பக்தர்கள் பெரியாரிடமே எதிர்ப்பைக் காட்டினார்கள். சீர்காழியில் பெரியார் பேசவிருந்த மேடைக்கு முன்னால் பெரிய பலகையை வைத்தார்கள். கடவுளை கற்பித்தவன் புத்திசாலி. ஏன்னா நாம் முட்டாளுனு சொல்றோம்; கடவுளை பரப்பியவன் பண்பாளன். வணங்குகிறவன் வாழ்வான் என்று எழுதி வைத்தார்கள். பெரியார் வந்து பார்க்க வேண்டுமாம், எழுதி வைத்தார்கள்;பெரியார் பார்த்தார்.
கடவுளை கற்பித்தவன் புத்திசாலி என்று எழுதி வைத்திருக்கிறார்கள். நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்று சொல்லுகிறேன். இரண்டு பேருக்கும் சின்ன வேறுபாடுதான் இருக்கிறது. இரண்டு பேரும் கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள் கிறோம். அவன் முட்டாளா புத்திசாலியா என்பதே இப்ப சண்டை வேறு ஒன்றுமில்லை, என்றார் பெரியார்.
கடவுள் உண்மையாக இல்லை. இயற்கையாக இல்லை. பெரியார் மூன்று கேள்வி கேட்பார். கடவுள் சூயவரசந-ஆ,ஐnஎநவேiடிn-ஆ, ஊசநயவiடிn-ஆ இதில் எது என்று கேட்டார். அதாவது கடவுள் இயல்பாக இருக்கிறதா, கண்டு பிடிக்கப்பட்டதா, உண்டாக்கப்பட்டதா, சொல்லு நீ.... நான் கடவுள் உண்டாக்கப்பட்டது, உண்டாக்கியவன் முட்டாள் தனமாக சரியான செய்திகளை சொல்லாமல் உண்டாக்கி வைத்து போய்விட்டான் என்று சொல்கிறேன். நீ உண்டாக்கியவன் புத்திசாலி என்று சொல்கிறாய். ஆனா இரண்டு பேரும் ஒன்றை ஒத்துக் கொள்கிறோம். கடவுள் இயற்கை அல்ல, உண்டாக்கப்பட்டது என்று பெரியார் சொன்னார். அதைப்போல உண்டாக்கப்பட்ட கடவுள் நம்முடைய அறியாமையை, ஏன்னா கடவுளுக்கு எது அடிப்படை என்றால் அறியாமையும் மலைப்பும்தான். அறியாமையே நமக்கு தெரியாத பொருளுக்கெல்லாம் கடவுள் என்று விளக்கம் சொல்கிறது.
5 ஆம் வகுப்பு மாணவனிடம் போய் 2-ம் 2-ம் எவ்வளவு என்றால் சொல்வான். 5-ம் 5-ம் எவ்வளவு என்றால் சொல்ல முடியும். இல்ல 5-ம் 5-ம் பெருக்கினால் எவ்வளவு என்றும் சொல்வான். அவனிடம் போய் 3284-ம் 8738-ம் எவ்வளவு என்றால்சொல்ல தெரியாது. அல்லது கொஞ்சம் நேரம் வேண்டும். அவன் தெரியவில்லை என்றால், ஆசிரியர் சரி அடுத்த முறை முயற்சி செய்து பார் என்று சொல்வார். கடவுள் என்று சொன்னால் ஆசிரியர் அனுமதிக்க மாட்டார். ஆனால்,சமுதாயம் அப்படிப்பட்ட போக்கை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. எதெல்லாம் தெரியவில்லையோ அதையெல்லாம் கடவுள் என்கிறான். அணுவை பிளந்தால் புரோட்டான், நியூட்டான் அதுக்கப்புறம் தெரியலைனு நாம சொல்வோம். அவன் கடவுள் என்று சொல்வான். பக்தனுக்கும் நாத்திகனுக்கும் உள்ள வேறுபாடு அங்கே தான் இருக்கிறது.
அந்த கட்டடத்துக்கு அந்தப் பக்கம் என்னவென்று தெரியாது என்று சொல்கிறோம் போய் பார்த்தா தெரியப் போகுது. மலைக்கு அந்தப் பக்கம் என்னவென்று தெரியாது போய் பார்த்தால் தெரியும். நிலவில் என்ன இருக்கிறது அப்ப தெரியாது போய் பார்த்தோம் தெரிந்து விட்டது. அதற்கு மேல் போக போகத் தெரியும், தெரியாததை தெரியாது என்று சொல்பவன் நாத்திகன். தெரியாததை கடவுள் என்று சொல்பவன் ஆத்திகன் அவ்வளவுதான் வேறுபாடு. நாங்கள் தெரியாததை தெரியாது என்று சொல்லுங்கள் நாணயமாவது மிஞ்சும். நம்மை வேண்டுமானால் முட்டாள் தெரியாதவன் என்று அவன் சொல்லிவிட்டுப் போகட்டும். நாணயமானவன் என்று சமுதாயம் ஒத்துக் கொள்ளும்.
நீங்கள் சொல்லுகிற பதில், கடவுள் என்கிற பதில் இரண்டையும் ஏற்றுக்கொள்ளாது. அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். இப்படி பல பேரால் மறுக்கப்பட்டிருக்கிற கடவுளை, யார் யார் மறுத்தார்கள் என்றெல்லாம் காலையில் சொன்னார்கள். கடவுள் என்பது ஒன்று அறிவுக்கு புறம்பாக இருக்கிறது. வேண்டாம் என்று சொல்கிறோம். இன் னொன்று தன்னம்பிக்கைக்கு எதிராக உள்ளது. கடவுள் நம்பிக்கையை விட்டு விடுங்கள் என்று சொல்கிறோம். ஆனால் நாம் கடவுள் செய்யும் என நம்பிக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறோம். கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டுவிடுகிறோம்,தோல்வியில் முடிகிறது.
அங்கிருந்து இசுலாமியர்கள் படையெடுத்து வந்தபோது இங்கு நம்ம அரசருக்கு ராஜகுரு அறிவுரை சொன்னார். அரசன் வைணவத்தை சேர்ந்தவன். நீ ஒன்றும் செய்யாதே எல்லையில் கொண்டு போய் துளசியை விரித்து விட்டால் போதும் என்றார்கள். துளசி தழையை பூஜை செய்து போட்டால் முஸ்லீமின் குதிரை இந்தப் பக்கம் வராது என்று சொன்னான். துளசி இலைகளைக் கொண்டு போய் தூவி விட்டான் குதிரைகள் அவற்றை தின்னுட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டது. சண்டை போடாம ஆட்சியை புடிச்சிட்டு போயிட்டான்.
நம்ம தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் அப்படித்தான் போய்விட்டது. ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும். இங்கிலாந்தில் ஆங்கிலேய தளபதி ஒருவன் இருந்தான். நெல்சன் என்று பெரிய கப்பல் படை தளபதி. புகழ் பெற்ற தளபதி அவன். தன் படை வீரர்களுக்கு சொன்னான் போருக்கு போகும் முன் சொன்னான், படை வீரர்களே கடவுளை நம்புங்கள், ஆனால் வெடிமருந்து நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூசாரியே சம்பளம் அதிகம் வேண்டுமென்றால் அரசு கிட்டதான் கோரிக்கை வைக்கிறான். எங்களுக்கு பாதுகாப்பு நிதி கொடுங்கள் என்று அரசைக் கேட்கிறான். ஓய்வூதியம் வேண்டும் என்று அரசைக் கேட்கிறான். கடவுள்கிட்ட ஒரு நாளும் கேட்டதில்லை. எல்லா பூசாரியும் சங்கம் வைத்து அரசுக்கிட்ட கோரிக்கை வைக்கிறான்.
கோயிலுக்கு அதிகமாக கூட்டம் போகிறது என்று சொன்னார்கள். பெரியார் எளிமையாக சொன்னார். அவர் எதையும் மிக எளிமையாக சொல்வார். கோயிலுக்கு கூட்டம் அதிகமாக போகிறதா? நான் ஒரே ஒரு நிபந்தனை வைக்கிறேன். ஒரு நாளைக்கு ஆண்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும். ஒரு நாளைக்கு பெண்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும். அப்புறம் பார் கூட்டத்தை என்று சொன்னார். இதுதான் கடவுள் நம்பிக்கை என்பது. இந்த கடவுள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பது வெளிநாடுகளில் அறிவுக்கு மட்டும் எதிரானது. அறிவுக்கு மட்டும் எதிரானது என்பதால் அறையிலிருந்து அறிஞர்கள் எல்லாம் உட்கார்ந்து அறிவியல் சிக்கலாக பார்த்தார்கள்.
பெரியாரே சொல்வார் கடவுள் உண்டா இல்லையா என்பது,அறையில் உட்கார்ந்து அறிஞர்கள் சொல்ல வேண்டிய செய்தி. அரங்கில் வந்து மக்களிடம் பேச வேண்டிய செய்தி இல்லை. ஆனால் ஏன் கடவுள் இல்லை என்று சொல்வதற்கு பெரியார் சில விளக்கங்களை சொல்வார். நிறைய பேர் கடவுள் இல்லை என்று சொல்லி யிருக்கிறார்கள். காலையில் எல்லாம் பேசினார்கள். நடிகர் கமலகாசன் கடவுள் இல்லை என்று சொல்லுவார். ஆனால், இடஒதுக்கீடு தப்பு என்கிறார். அவருக்கு கடவுள் இல்லை தான். இந்து ராம் கடவுள் இல்லை என்று சொல்லுகிற மார்க்சிஸ்ட் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார். ஆனால் குற்றவாளியாக இருக்கிற இளைய சங்கராச் சாரியாரை அவர் தான் காரில் அழைத்துப் போய் காஞ்சிபுரத்தில் விடுகிறார்.
இவர்களையெல்லாம் விட்டுவிடுங்கள். இந்த நாட்டிற்கு தீங்காய் வந்த இந்துத்துவா என்ற தத்துவத்தை தந்த சாவர்க்கர்,காந்தி கொலையில் குற்றவாளி. இந்துத்துவா என்ற பாசிச கருத்தை முதலில் விதைத்தவர். இந்த நோய்க்கெல்லாம் காரணமாக இருந்த சாவர்க்கர் ஒரு நாத்திகர். அவர் கடவுளை நம்பியவர் அல்ல. ஆனால் பார்ப்பனன் உயர்ந்தவன். ஆரியன் உயர்ந்தவன் என்ற ஆணவ கருத்தும் ஆரியர் ஆட்சியில்தான் இந்தியா இருக்க வேண்டுமென்றும் அவர் விதைத்த நச்சு விதைகள் ஏற்படுத்தியிருக்கிற நாசங்களை நாம் அறிவோம். கடவுள் உண்டு இல்லை என்பதால் ஒன்றும் பெரிதாய் வந்து விடாது. இந்த கடவுள் நம்பிக்கையை ஏன் மறுக்கிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது பெரியாரின் தத்துவங்கள் அனைத்தும் என்பதால்தான். பெரியார் கடவுள் மறுப்பை எப்படி சொன்னார் என்றால், கடவுளை எப்படி மறுக்கிறார் என அவரே சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் குடி அரசில் ஒரு உரையாடலை எழுதி இருக்கிறார்.
நாத்திகனை கூப்பிட்டு ஒரு ஆத்திகன் கதை சொல் கிறான். கடவுள் எப்படியெல்லாம் உலகத்தை படைத்தார் என்று சொல்லுவான். அவர்தான் வெளிச்சத்தைக் கொடுத்தான் என்று சொல்லுவான். நாத்திகன் கேள்வி கேட்பான். “அதற்கு முன் இருட்டாய் இருந்துச்சா. அப்படீன்னா இருட்டை எவன் உண்டாக்கினான்.” இப்படி பல கேள்விகளை கேட்டார்.
இன்னொன்றும் சொன்னார் பக்தன் இரண்டை நம்புகிறான். கடவுளை நம்புகிறான், விதியை நம்புகிறான். பெரியார் கேட்டார், கொஞ்சம் பொறுமையாய் யோசி. கடவுள் என்பதை நம்பினால் விதியை மறந்துவிடு. விதி உண்மையாக இருந்தால் கடவுள் இல்லை. ஏனென்றால் என்னுடைய விதிப்படி நான் பிறந்தேன், வளர்ந்தேன், சாவேன் என்றால் இன்னைக்கு கீழே இறங்கி வண்டியில் போகையில் அந்த மூலையில் போய் விபத்து நேரிட்டு சாவதுதான் விதியாக இருந்தால், அப்புறம் எதற்கு கடவுளை கும்பிடனும். கும்பிட்டாலும் சாவேன். ஏன்னா விதி. அதுதான் என்ன பண்ணினாலும் சாவேன் என்றால், கடவுள் எதற்கு? அல்லது கடவுளை நம்பினால்,கடவுளை வணங்கினால், பிரார்த்தனை செய்தால், அதற்கு உண்டியலில் போட்டால், பூஜை செய்தால் அந்தவிதியை கடவுள் மாற்றிவிடும் என்றால் விதியை உண்மை என்று சொல்லாதே. இரண்டில் ஏதாவது ஒன்றை சொல் என்றார் பெரியார்.
Wednesday, November 24, 2010
Friday, November 19, 2010
முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் ---- புத்தக விமர்சனம்
ஜனவரி 29 - 2009 - "இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னை வாலிபர் தீக்குளித்து மரணம்" என்ற செய்தியை தாங்கிய ஒரு தமிழ் மாலை நாளிதழை தேனீர் கடைகளின் முன் முகப்பில் பார்த்த போது 'என்ன முட்டாள்தனம் இது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இங்கே இறந்தால் போர் நின்று விடுமா?' என்ற பொதுபுத்தியால் உருவான கருத்தே எம்மிடம் மேலோங் கி இருந்தது.
வறுமையை வாழ்க்கையாக உடுத்தி தூங்கி கிடந்த தமிழ் சமூகத்தை தன் மரணத்தின் மூலம் தட்டி எழுப்பிய சகோதரன் முத்துக்குமரனின் வாழ்க்கையை பால்யம் முதல் படம் பிடிக்கும் புத்தகம் தான் "முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்".
முத்துக்குமரனுக்கு தமிழ் உணர்வு ஊட்டிய புலவர் தமிழ்மாறனுக்கு படையல் இட்டு துவங்குகிறது இந்த புத்தகம்.
திருச்செந்தூரில் குமரேசன்- சண்முகத்தாய் ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்த முத்துக்குமார், சென்னை கொளத்தூரில் நடைபயின்று, தேனியில் தன் ஆரம்ப கல்வியை துவங்கி, தன் உயர்நிலை கல்வியை சொந்த ஊரிலேயே படித்தார். பள்ளி பருவத்திலேயே தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த முத்துகுமரன், கலந்து கொள்ளும் பேச்சுப்போட்டிகளில் தனது பள்ளிக்கு பெருமை சேர்க்க தவறவில்லை. முத்துக்குமரனை பேசுவதற்காக அழைத்து சென்றாலே பள்ளிக்கு ஒரு பரிசு நிச்சயம் என்ற நிலையை உருவாக்கி இருந்தார்.
புத்தர் முதல் காந்தி வரை ஒரு சிறு நிகழ்வு தான் அவர்களின் அடுத்தகட்ட வாழ்க்கையை தீர்மானித்து இருகின்றது. முத்துகுமரனின் வாழ்க்கையிலும் அவ்வாறு நடந்த ஒரு நிகழ்வே அவரை பின்னாளில் ஒரு தியாகி ஆக்கி இருக்கிறது என குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அது.... ஒரு கிறிஸ்துமஸ் தினம். முத்துகுமரனின் வறுமை வாழ்கையை அறிந்திருந்த அவருடைய வகுப்பாசிரியை சசிலதா, அந்த பண்டிகை நாளில் மதிய விருந்துக்காக அழைத்திருந்தார். அப்போது முத்துகுமரன் இயேசுவை பற்றி கேட்க, ஆசிரியையும் சொல்லி விட்டு " மக்களின் நன்மைக்காக மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும், அதற்கு நீ அனைவரையும் நேசிக்க வேண்டும், அன்பும் கருணையும் கடைசிவரை பற்றி இருக்க வேண்டும், நீ எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் சொன்ன வார்த்தைகள் அவருள் ஆழப்பதிந்தன.
முத்துக்குமரன் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது பள்ளியில் நடந்த இலக்கிய கூட்டத்திற்கு வந்த புலவர் தமிழ் மாறனின் பேச்சால் கவரப்பெற்று அவரோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது அவரது வாழ்கையில் அடுத்த அத்தியாயம் பிறக்க காரணம் ஆனது என குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
பத்தாம் வகுப்பில் 466 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாவதாக மாணவனாக வந்தாலும், வறுமையின் கொடிய பிடியில் சிக்கி தவித்ததால் அவரால் படிப்பை தொடர முடியாமலே போயிற்று . படிக்கும் போதே தமிழ் தேசிய இயக்கங்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட முத்துக்குமரன்"ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம்" ஆரம்பிக்கப்பட்ட போது அதில் கலந்து கொண்டு சுவரொட்டி ஒட்டி இருக்கிறார். பதின்ம வயதை கடந்த போது, புரட்சிகர இயக்கங்களோடு தன்னை இணைத்து கொண்டு களப்பணி ஆற்றினார்.
இளமையில் வறுமை கொடிது என்பார்கள் ஆனால் முத்துக்குமரனின் பிறப்பு முதல் இறப்பு வரை வறுமை எப்படி அவரை தொடர்ந்து துரத்தி வந்திருக்கிறது என்பதையும் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் . ஒரு சீட்டு கம்பனியில் வேலைக்கு சேர்ந்து பின் தாயின் காசநோய் காரணமாக சென்னை வந்தும், தாயை மீட்க முடியாமல் போய் இருக்கிறது. மளிகை கடையில் உதவியாளனாக, குயின்ஸ்லாந்து கேளிக்கை பூங்காவில் பாதுகாவலராக என பல இடங்களில் வேலை பார்த்து தங்கை திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்த சில காலத்திலேயே விபத்து ஒன்றில் தனது சகோதரர் வசந்தகுமாரை பறி கொடுத்து இருக்கிறார்.
வறுமை இன்னொரு உடன்பிறத்தவனை போல் கூடவே இருந்தாலும் புத்தங்கள் படிக்கவோ, வாங்கவோ மட்டும் அவர் தவறவே இல்லை. அவர் இறந்த போது அவருடைய சேமிப்பாக மட்டும் சுமார் 800 புத்தகங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன. வாசிப்பு அவர் வாழ்வின் அங்கமாகி, அதுவே அவருக்குள்ளான சமூகக் கோபத்தை அணையாது வளர்த்தெடுத்து போர் குணத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றதாக கூறுகிறார் நூலாசிரியர்.
"இன்றைய கல்வி முறைகள் அறியாமையை போக்குவதற்கு பதிலாக வேலைக்காரர்களை உருவாக்குவதாக அமைகிறது" என முத்துகுமரன் மனம் வெதும்பி தன்னிடம் குறிப்பிட்டதாக கூறும் நூலாசிரியர்"படித்து அறிவில் சிறந்து இச்சமூக வளர்ச்சிக்கும் மாந்தர் குல முழுமைக்குமான அர்ப்பணிப்புமிக்க வாழ்வை அவர்கள் பெற்று கொள்ள வேண்டும் என்று விரும்புவதில்லை. கல்வி அமைப்பு முழுக்க முழுக்கச் சுயநலப் போக்கு கொண்டதாகவே இருக்கிறது" என வருத்தப்பட்டதையும் பதிவு செய்ய தவறவில்லை.தமிழ்நாட்டில், தமி ழ் வழி கல்வியின் அவசியம் குறித்துஏக் கத்துடனே தன் குறிப்பேட்டில் எழுதியுள்ளார் முத்துக்குமரன்.
எழுத்து சீர்திருத்தம் தேவையற்றது என்பது குறித்து அவர் எழுதி, தீராநதியில் வெளிவந்த விமர்சனத்தையும் இந்த நூலில் குறிப்பிட்டு உள்ளார் நூல் ஆசிரியர்.
திரைப்படம் மக்களுடன் உரையாடுவதற்கான சிறந்த ஊடகம் என கருதி திரைப்படதுறையில் தன்னை இணைத்துக்கொண்டார். குறும்படங்கள், ஆவணப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாற்று சினிமா நோக்கி மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதிலேஆர்வமாகஇருந்திருக்கி
ஈழப்போராட்டம் முத்துகுமரனுடைய உதிரத்திலே கலந்து ஓடியது என கூறும் ஆசிரியர், பேச்சு வார்த்தைகள், ராணுவ தாக்குதல்கள், மாவீரர் தின உரைகள் என கடந்த பத்தாண்டு கால ஈழ போராட்ட செய்திகளை சேகரித்து வைத்திருந்ததாகவும் "வாழ்வில் ஒரு முறையாவது அந்த வீரம் விளைந்த ஈழம் மண்ணில் கால்பதிக்க வேண்டும், அங்குள்ள பனைமரங்களை கட்டிப்பிடிக்க வேண்டும், என் ஆசைகள் நிறைவேறுமா?"எனமுத்துக்குமரன் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
முத்துகுமரன் வீரச்சாவை தழுவிய அந்த நாள் காலையிலே தன்னை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் தன்னால் பேச முடியவில்லை என்பதை வேதனையோடு குறிப்பிடும் நூலாசிரியர், அல்ஜீரிய பாடகர் மத்தூர் பின் - இன் பாடலோடு இந்நூலை முடிக்கிறார்.
அது...
நீ இறந்து விட்டாலும்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாய்
ஒரு வரலாறாக
ஒரு போராட்டமாக
ஒரு நம்பிக்கையாக......
ஆம்..... உண்மையில் இந்த புத்தகத்தை ஒரே வீச்சில் படித்து முடித்த போது என் அழுகையை அடக்கவே முடியவில்லை..... முத்துக்குமரனை இந்த தமிழ் சமூகம் கொலை செய்து விட்டதாகவே கருதுகிறேன்.. ஆம் இது ஒரு அப்பட்டமான கொலை தான் . இதன் முதல் குற்றவாளிகள் ஆளும் வர்க்கம் என்றால் ஈழபோரில் மவுனியாக இருந்த இந்த தமிழ் சமூகமும்குற்றவாளிப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களே.......
மூச்சு விடும் கடைசி தருவாயில் என்ன சாதி என செவிலி குறிப்பெடுக்க கேட்க, தமிழ் சாதி என்று கூறி இறந்த 'கரும்புலி' முத்துகுமாரின் வாழ்க்கை வரலாற்றையும் , அவருடைய கவிதைகள் தாங்கி வந்துள்ள இந்த புத்தகத்தை அருமையாக தொகுத்துள்ளார் நூலாசிரியர் ஆ.கலைச்செல்வன்.
தமிழ் மொழியை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த தமிழ் தேசியவாதியின் வரலாற்றை கண்டிப்பாக வாசிக்கபரிந்துரைக் கிறேன்.
தமிழ் தேசம் வெளியீடாக வந்திருக்கும் இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 60.இணையம் மூலம் வாங்க இங்கே சொடுக்கவும்.
தபால் மூலம் பெற்று கொள்ள....................
தமிழ் தேசம்,
87/31, காமராஜர் நகர்,
3 வது தெரு, சூளை மேடு,
சென்னை - 94
நன்றி: பண்புடன் ,