கதிர்நிலம்

My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Wednesday, December 29, 2010


அம்பேத்கரை கண்டேன்

சென்னை மினி உதயம் திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படம்  11 மணி காட்சிக்காக நுழைவு சீட்டு வாங்கி கொண்டு 11:02 - க்கு உள்ளே நுழைந்தால் பேரதிர்ச்சி. என்னை தவிர வேறு யாருமே இல்லை. வெளியே வந்து நுழைவு காவலரிடம் கேட்ட போது "எல்லாரும் 11:30  மணி ஷோ-ன்னு நினச்சிட்டு வருவாங்க சார். எப்படியும் முன்னூறு பேர் வருவாங்க" என்றார். லேசாக பெருமூச்சு விட்டு விட்டு, உள்ளே நுழைந்து எனது இருக்கையில் அமர்ந்தேன். பத்து நிமிடத்துக்குள் சுமார் இருநூறு பேர் வந்து அமர, மனம் ஆறுதல் அடைந்தது.
இந்திய சுதந்திரத்தை முன்வைத்து லஜபதி ராயோடு அம்பேத்கர் கொண்டமுரண் அரசியலோடு  கதை துவங்குகிறது. காட்சிகள் விரிய, விரிய அம்பேத்கர் என்ற பிரமாண்டம் எனது உடல் முழுவதும் வியாபிக்க துவங்கினார். வறுமையினாலும், தீராத வியாதியினாலும் தனது மனைவி,நான்கு குழந்தைகள்  என எல்லாவற்றையும் பறி கொடுத்தும்,   வாழ்க்கையின் கடைசி காலகட்டம் வரை புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய இந்த மனிதனின் வாழ்க்கை கதையை திரையில் கண்ட போது, ஒரு மகானின் வாழ்க்கையை கண்டதாவே உணர்ந்தேன். 1956-ம் வருடம் அம்பேத்கர் இறந்தார் என்ற வரிகளோடு திரைப்படம் முடியும் போது மனம் கொஞ்சம் உணர்ச்சிவசப்படவே செய்தது.
திரையில் அம்பேத்கராக வாழ்ந்து காட்டிய மம்மூட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்தியாவின் மிக முக்கியமான தலைவர் வேடத்தில் ஒருவர் நடித்து, அனைத்து தரப்பு மக்களையும் கவர்வது லேசான காரியம் அல்ல, மம்மூக்கா அருமையாய் வாழ்ந்து காட்டி இருக்கிறார். அம்பேத்கர் பேரை கேட்டாலே ஓட்டம் பிடிக்கும் நமது நடிகர்கள் மத்தியில், ஒரு சவாலான கதாப்பத்திரத்தை ஏற்று,  அதை கனக் கச்சிதமாய் செய்து முடித்திருக்கும் மம்மூக்காவின் மேல் மரியாதை இன்னும் கூடுகிறது.
திரையில் என்னை கவர்ந்த இன்னொரு மனிதர் காந்தியாக நடித்தவர். அதுவும் அவருடைய உடல்மொழி இருக்கிறதே அப்பப்பா.... அட்டகாசம்... காந்தி பேசும் பல காட்சிகளிலும், 'அம்பேத்கர் ஒழிக' என முழக்கம் கேட்கும் பல காட்சிகளிலும் திரையரங்கு முழுவதும் சன்னமான சிரிப்பொலி எழும்புகிறது.
படம் பார்த்து வெளியே வந்த போது ஏதாவது நண்பர்களை சந்தித்து விட மாட்டேனா, அவர்களிடம் ஒரு இருபது நிமிடம் அம்பேத்கர் பற்றியும், இந்த திரைப்படம் பற்றியும் பேச வேண்டும் போல் இருந்தது.
'சினிமா'  பற்றி ஒவ்வருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். என்னை பொறுத்தவரையில் 'சினிமா' பொழுதுபோக்குக்கான ஊடகம் மட்டும் அல்ல.அது ஒரு நவீன கலையின் வடிவம். அந்த நவீன கலை ஊடகத்தின் வழியாக இது போன்ற நல்ல திரைப்படங்கள் வருவதே சமூகத்தை செம்மைபடுத்த உதவும்.
'அம்பேத்கர்' திரைப்படம் இன்னும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வரலாற்று நாயகனுடைய குரல் இன்னும் பல மக்களுக்கு போய் சேர்ந்திருக்குமே என்ற ஆதங்கம் எழாமல் இல்லை. அரிவாளுடனும், பரட்டை தலையுடனும் திரியும் கதாநாயகர்களையும், அதன் இயக்குனர்களையும் கட்டி பிடித்து பாராட்டி மகிழும் நமது சூப்பர் ஆக்டர்களுக்கோ, ஸ்டார்களுக்கோ அது பற்றிய அக்கறையே இல்லை. ஒருவேளை அப்படி செய்தால்  தானும் தீண்டத்தகாதவன் ஆகி விடுவோம் என்ற பயம் காரணமாய் இருக்கும்!.
அம்பேத்கரை தலித்துகளின் குறியீடாக இன்று காண்பது துரதிஷ்டவசமானது, அது ஒரு சமூக மன நோயும் கூட... உண்மையில் அம்பேத்கர் நவீன இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கான குறியீடு.
வரலாற்றை நமக்கு சொல்லி தர மறந்த முந்தைய தலைமுறையும், வரலாற்றை கற்று கொள்ள போகும் நாளைய தலைமுறையையும் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள  திரையரங்குக்கு கூட்டி செல்லுங்கள்.  உண்மையான ஒரு சமூக போராளியின் வரலாறு அனைவருக்கும் சென்றடைய  உதவுங்கள். 
- ஸ்டாலின் பெலிக்ஸ் ( stalinfelix2000@gmail.com)
மேலே சொன்ன உணர்வு  என்னிலும் படர் த தால்

Wednesday, December 22, 2010

தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறவன்....


தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறவன் - நாத்திகன்
தெரியாததை கடவுள் என்று கூறுபவன் - பக்தன்
கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை
 பல்லடத்தில் நடந்த நாத்திகர் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:
இன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சி நாத்திகர் விழா என்ற பெயரால் ஒரு மாநாட்டை கூட்டி நாத்திக கருத்துகளை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அல்லது ஏற்கனவே இருக்கிற கருத்துகளை மேலும் தூண்டி விடுவதற்கும் அதை துளிர்த்து விடுவதற்குமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கிறோம் என்றாலும் இதெல்லாம் ஏற்கனவே மக்களுக்கு தெளிவாக தெரிந்த செய்திகள் தான். மாணவப் பருவத்தில் பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு அறிவியல் என்று ஊட்டப்படுகிறது. அறிவியல் பாடம் சொல்லி தந்த செய்திகள் அதிலே நிபுலா தியரி என்று சொல்லுகிறார்கள். பிக்பேங்க் தியரி என்று சொல்லுகிறார்கள். உலகம் எப்படி உண்டானது என்பதற்கு உலகம் கடவுளால் படைக்கப்பட்டது பொய் என்று அறிவியல் பாடம் சொல்லிவிட்டது மாணவப் பருவத்தில்.
 டார்வின் தியரியை படிக்கிறார்கள் எப்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றது என்று. ஓர் அணு அமீபாவாக இருந்து மனிதனாக உரு மலர்ச்சிப் பெற்ற முழு வரலாற்றை டார்வின் தத்துவம் சொல்லி வருகிறது. ஆக மனிதன் படைக்கப்படவில்லை. மனிதன் உரு மலர்ந்தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அறிவியல் பாடம் சொல்லி விடுகிறது. எல்லாம் கடவுள் படைக்கவில்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அறிவியல்பாடம் சொல்கிறது. ஆனால் அறிவியல் என்பது அறிவியல் அறிவாக உள்ளது. அறிவியல் மனப்பான்மையாக மாற வேண்டும் என்பதே நம் நோக்கம்.
 அறிவியல் அறிவு - ளுஉநைவேகைiஉ முnடிறடநனபந மட்டும் போதாது அறிவியல் மனப்பான்மை - ளுஉநைவேகைiஉ ஆநவேயடவைல வேண்டும். அப்படி அறிவியல் மனப்பான்மை இருந்தால் தான் எதையும் அறிவியல் பார்வையில் அணுக முடியும் - ளுஉநைவேகைiஉ யயீயீசடியஉh. அறிவியல் அணுகுமுறை இருந்தால் தானாகவே அறிவியல் கண்டுபிடிப்புகள் - ளுஉநைவேகைiஉ ஐnஎநவேiடிளே உருவாகும்.
 அறிவியல் மனப்பான்மை இல்லாததால்தான் சரஸ்வதிக்கு வருடம் தவறாமல் பூஜை நடத்தியும் காகிதத்தை மிதித்தாலும் கண்ணில் ஒற்றிக் கும்பிடும் நமது நாடு தாழ்ந்து கிடக்க காகிதத்தில் மலம் துடைக்கும் ஐரோப்பியர்கள் மேலை நாட்டார்கள் வளர்ந்து நிற்கிறார்கள்.
 அறிவியலை வயிற்றுக்காக படிப்பதற்கு மாறாக அறி வியலை மூளைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதை செயல்படுத்த வேண்டும் என்று கேட்பதும்அப்படி செயல்படுத்த வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் வைத்து அதற்கு துணையான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினார்கள். அருமைத் தோழர்கள் அலகு குத்தி தொங்கிய வண்ணம் காட்டினார்கள். இராட்டின காவடி என்று அலகு குத்தி தோழர் சட்ட கல்லூரி மாணவர் பன்னீர்செல்வம்கோவை மாநகர செயலாளர்கோபால்பல்லடத்தைச் சேர்ந்த குமார் கூட அலகு குத்தி வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். உள்ளூர் தோழர்களைப் பார்த்தீர்கள்.
 பல பேர் வந்தார்கள். காரணம் இதன் மூலம் செயல் விளக்கமாக செய்ய வேண்டும் என்பதும் கூடுதல் முயற்சி. இப்படிப்பட்ட செயல்களில் கடவுள் மறுப்பைப் பற்றி ஏன் கடவுள் இல்லைஎப்படி இல்லை என்று விளக்குகிறார்கள். முழக்கமிட்டபோது கூட சிலருக்கு வருத்தமாக இருந் திருக்கும். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்கிறார்கள். பரப்பியவனை அயோக்கியன் என்கிறார்கள். வணங்கு கிறவனை காட்டுமிராண்டி என்று சொல்கிறார்கள். வீதியில் போகிறவனை பார்த்து திட்டுவதுபோல அல்ல.
இதனால் வருத்தமுற்ற பக்தர்கள் பெரியாரிடமே எதிர்ப்பைக் காட்டினார்கள். சீர்காழியில் பெரியார் பேசவிருந்த மேடைக்கு முன்னால் பெரிய பலகையை வைத்தார்கள். கடவுளை கற்பித்தவன் புத்திசாலி. ஏன்னா நாம் முட்டாளுனு சொல்றோம்கடவுளை பரப்பியவன் பண்பாளன். வணங்குகிறவன் வாழ்வான் என்று எழுதி வைத்தார்கள். பெரியார் வந்து பார்க்க வேண்டுமாம்எழுதி வைத்தார்கள்;பெரியார் பார்த்தார்.
 கடவுளை கற்பித்தவன் புத்திசாலி என்று எழுதி வைத்திருக்கிறார்கள். நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்று சொல்லுகிறேன். இரண்டு பேருக்கும் சின்ன வேறுபாடுதான் இருக்கிறது. இரண்டு பேரும் கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள் கிறோம். அவன் முட்டாளா புத்திசாலியா என்பதே இப்ப சண்டை வேறு ஒன்றுமில்லைஎன்றார் பெரியார்.
 கடவுள் உண்மையாக இல்லை. இயற்கையாக இல்லை. பெரியார் மூன்று கேள்வி கேட்பார். கடவுள் சூயவரசந-ஆ,nஎநவேiடிn-ஊசநயவiடிn-ஆ இதில் எது என்று கேட்டார். அதாவது கடவுள் இயல்பாக இருக்கிறதாகண்டு பிடிக்கப்பட்டதாஉண்டாக்கப்பட்டதாசொல்லு நீ.... நான் கடவுள் உண்டாக்கப்பட்டதுஉண்டாக்கியவன் முட்டாள் தனமாக சரியான செய்திகளை சொல்லாமல் உண்டாக்கி வைத்து போய்விட்டான் என்று சொல்கிறேன். நீ உண்டாக்கியவன் புத்திசாலி என்று சொல்கிறாய். ஆனா இரண்டு பேரும் ஒன்றை ஒத்துக் கொள்கிறோம். கடவுள் இயற்கை அல்லஉண்டாக்கப்பட்டது என்று பெரியார் சொன்னார். அதைப்போல உண்டாக்கப்பட்ட கடவுள் நம்முடைய அறியாமையைஏன்னா கடவுளுக்கு எது அடிப்படை என்றால் அறியாமையும் மலைப்பும்தான். அறியாமையே நமக்கு தெரியாத பொருளுக்கெல்லாம் கடவுள் என்று விளக்கம் சொல்கிறது.
5 ஆம் வகுப்பு மாணவனிடம் போய் 2-ம் 2-ம் எவ்வளவு என்றால் சொல்வான். 5-ம் 5-ம் எவ்வளவு என்றால் சொல்ல முடியும். இல்ல 5-ம் 5-ம் பெருக்கினால் எவ்வளவு என்றும் சொல்வான். அவனிடம் போய் 3284-ம் 8738-ம் எவ்வளவு என்றால்சொல்ல தெரியாது. அல்லது கொஞ்சம் நேரம் வேண்டும். அவன் தெரியவில்லை என்றால்ஆசிரியர் சரி அடுத்த முறை முயற்சி செய்து பார் என்று சொல்வார். கடவுள் என்று சொன்னால் ஆசிரியர் அனுமதிக்க மாட்டார். ஆனால்,சமுதாயம் அப்படிப்பட்ட போக்கை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. எதெல்லாம் தெரியவில்லையோ அதையெல்லாம் கடவுள் என்கிறான். அணுவை பிளந்தால் புரோட்டான்நியூட்டான் அதுக்கப்புறம் தெரியலைனு நாம சொல்வோம். அவன் கடவுள் என்று சொல்வான். பக்தனுக்கும் நாத்திகனுக்கும் உள்ள வேறுபாடு அங்கே தான் இருக்கிறது.
 அந்த கட்டடத்துக்கு அந்தப் பக்கம் என்னவென்று தெரியாது என்று சொல்கிறோம் போய் பார்த்தா தெரியப் போகுது. மலைக்கு அந்தப் பக்கம் என்னவென்று தெரியாது போய் பார்த்தால் தெரியும். நிலவில் என்ன இருக்கிறது அப்ப தெரியாது போய் பார்த்தோம் தெரிந்து விட்டது. அதற்கு மேல் போக போகத் தெரியும்தெரியாததை தெரியாது என்று சொல்பவன் நாத்திகன். தெரியாததை கடவுள் என்று சொல்பவன் ஆத்திகன் அவ்வளவுதான் வேறுபாடு. நாங்கள் தெரியாததை தெரியாது என்று சொல்லுங்கள் நாணயமாவது மிஞ்சும். நம்மை வேண்டுமானால் முட்டாள் தெரியாதவன் என்று அவன் சொல்லிவிட்டுப் போகட்டும். நாணயமானவன் என்று சமுதாயம் ஒத்துக் கொள்ளும்.
 நீங்கள் சொல்லுகிற பதில்கடவுள் என்கிற பதில் இரண்டையும் ஏற்றுக்கொள்ளாது. அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். இப்படி பல பேரால் மறுக்கப்பட்டிருக்கிற கடவுளையார் யார் மறுத்தார்கள் என்றெல்லாம் காலையில் சொன்னார்கள். கடவுள் என்பது ஒன்று அறிவுக்கு புறம்பாக இருக்கிறது. வேண்டாம் என்று சொல்கிறோம். இன் னொன்று தன்னம்பிக்கைக்கு எதிராக உள்ளது. கடவுள் நம்பிக்கையை விட்டு விடுங்கள் என்று சொல்கிறோம். ஆனால் நாம் கடவுள் செய்யும் என நம்பிக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறோம். கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டுவிடுகிறோம்,தோல்வியில் முடிகிறது.
 அங்கிருந்து இசுலாமியர்கள் படையெடுத்து வந்தபோது இங்கு நம்ம அரசருக்கு ராஜகுரு அறிவுரை சொன்னார். அரசன் வைணவத்தை சேர்ந்தவன். நீ ஒன்றும் செய்யாதே எல்லையில் கொண்டு போய் துளசியை விரித்து விட்டால் போதும் என்றார்கள். துளசி தழையை பூஜை செய்து போட்டால் முஸ்லீமின் குதிரை இந்தப் பக்கம் வராது என்று சொன்னான். துளசி இலைகளைக் கொண்டு போய் தூவி விட்டான் குதிரைகள் அவற்றை தின்னுட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டது. சண்டை போடாம ஆட்சியை புடிச்சிட்டு போயிட்டான்.
 நம்ம தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் அப்படித்தான் போய்விட்டது. ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும். இங்கிலாந்தில் ஆங்கிலேய தளபதி ஒருவன் இருந்தான். நெல்சன் என்று பெரிய கப்பல் படை தளபதி. புகழ் பெற்ற தளபதி அவன். தன் படை வீரர்களுக்கு சொன்னான் போருக்கு போகும் முன் சொன்னான்படை வீரர்களே கடவுளை நம்புங்கள்ஆனால் வெடிமருந்து நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 பூசாரியே சம்பளம் அதிகம் வேண்டுமென்றால் அரசு கிட்டதான் கோரிக்கை வைக்கிறான். எங்களுக்கு பாதுகாப்பு நிதி கொடுங்கள் என்று அரசைக் கேட்கிறான். ஓய்வூதியம் வேண்டும் என்று அரசைக் கேட்கிறான். கடவுள்கிட்ட ஒரு நாளும் கேட்டதில்லை. எல்லா பூசாரியும் சங்கம் வைத்து அரசுக்கிட்ட கோரிக்கை வைக்கிறான்.
 கோயிலுக்கு அதிகமாக கூட்டம் போகிறது என்று சொன்னார்கள். பெரியார் எளிமையாக சொன்னார். அவர் எதையும் மிக எளிமையாக சொல்வார். கோயிலுக்கு கூட்டம் அதிகமாக  போகிறதாநான் ஒரே ஒரு நிபந்தனை வைக்கிறேன். ஒரு நாளைக்கு ஆண்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும். ஒரு நாளைக்கு பெண்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும். அப்புறம் பார் கூட்டத்தை என்று சொன்னார். இதுதான் கடவுள் நம்பிக்கை என்பது. இந்த கடவுள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பது வெளிநாடுகளில் அறிவுக்கு மட்டும் எதிரானது. அறிவுக்கு மட்டும் எதிரானது என்பதால் அறையிலிருந்து அறிஞர்கள் எல்லாம் உட்கார்ந்து அறிவியல் சிக்கலாக பார்த்தார்கள்.
 பெரியாரே சொல்வார் கடவுள் உண்டா இல்லையா என்பது,அறையில் உட்கார்ந்து அறிஞர்கள் சொல்ல வேண்டிய செய்தி. அரங்கில் வந்து மக்களிடம் பேச வேண்டிய செய்தி இல்லை. ஆனால் ஏன் கடவுள் இல்லை என்று சொல்வதற்கு பெரியார் சில விளக்கங்களை சொல்வார். நிறைய பேர் கடவுள் இல்லை என்று சொல்லி யிருக்கிறார்கள். காலையில் எல்லாம் பேசினார்கள்.  நடிகர் கமலகாசன் கடவுள் இல்லை என்று சொல்லுவார். ஆனால்இடஒதுக்கீடு தப்பு என்கிறார். அவருக்கு கடவுள் இல்லை தான். இந்து ராம் கடவுள் இல்லை என்று சொல்லுகிற மார்க்சிஸ்ட் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார். ஆனால் குற்றவாளியாக இருக்கிற இளைய சங்கராச் சாரியாரை அவர் தான் காரில் அழைத்துப் போய் காஞ்சிபுரத்தில் விடுகிறார்.
 இவர்களையெல்லாம் விட்டுவிடுங்கள். இந்த நாட்டிற்கு தீங்காய் வந்த இந்துத்துவா என்ற தத்துவத்தை தந்த சாவர்க்கர்,காந்தி கொலையில் குற்றவாளி. இந்துத்துவா என்ற பாசிச கருத்தை முதலில் விதைத்தவர். இந்த நோய்க்கெல்லாம் காரணமாக இருந்த சாவர்க்கர் ஒரு நாத்திகர். அவர் கடவுளை நம்பியவர் அல்ல. ஆனால் பார்ப்பனன் உயர்ந்தவன். ஆரியன் உயர்ந்தவன் என்ற ஆணவ கருத்தும் ஆரியர் ஆட்சியில்தான் இந்தியா இருக்க வேண்டுமென்றும் அவர் விதைத்த நச்சு விதைகள் ஏற்படுத்தியிருக்கிற நாசங்களை நாம் அறிவோம். கடவுள் உண்டு இல்லை என்பதால் ஒன்றும் பெரிதாய் வந்து விடாது. இந்த கடவுள் நம்பிக்கையை ஏன் மறுக்கிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது பெரியாரின் தத்துவங்கள் அனைத்தும் என்பதால்தான். பெரியார் கடவுள் மறுப்பை எப்படி சொன்னார் என்றால்கடவுளை எப்படி மறுக்கிறார் என அவரே சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் குடி அரசில் ஒரு உரையாடலை எழுதி இருக்கிறார்.
 நாத்திகனை கூப்பிட்டு ஒரு ஆத்திகன் கதை சொல் கிறான். கடவுள் எப்படியெல்லாம் உலகத்தை படைத்தார் என்று சொல்லுவான். அவர்தான் வெளிச்சத்தைக் கொடுத்தான் என்று சொல்லுவான். நாத்திகன் கேள்வி கேட்பான். அதற்கு முன் இருட்டாய் இருந்துச்சா. அப்படீன்னா இருட்டை எவன் உண்டாக்கினான்.” இப்படி பல கேள்விகளை கேட்டார்.
 இன்னொன்றும் சொன்னார் பக்தன் இரண்டை நம்புகிறான். கடவுளை நம்புகிறான்விதியை நம்புகிறான். பெரியார் கேட்டார்கொஞ்சம் பொறுமையாய் யோசி. கடவுள் என்பதை நம்பினால் விதியை மறந்துவிடு. விதி உண்மையாக இருந்தால் கடவுள் இல்லை. ஏனென்றால் என்னுடைய விதிப்படி நான் பிறந்தேன்வளர்ந்தேன்சாவேன் என்றால் இன்னைக்கு கீழே இறங்கி வண்டியில் போகையில் அந்த மூலையில் போய் விபத்து நேரிட்டு சாவதுதான் விதியாக இருந்தால்அப்புறம் எதற்கு கடவுளை கும்பிடனும். கும்பிட்டாலும் சாவேன். ஏன்னா விதி. அதுதான் என்ன பண்ணினாலும் சாவேன் என்றால்கடவுள் எதற்குஅல்லது கடவுளை நம்பினால்,கடவுளை வணங்கினால்பிரார்த்தனை செய்தால்அதற்கு உண்டியலில் போட்டால்பூஜை செய்தால் அந்தவிதியை கடவுள் மாற்றிவிடும் என்றால் விதியை உண்மை என்று சொல்லாதே. இரண்டில் ஏதாவது ஒன்றை சொல் என்றார் பெரியார்.